Advertisment

உலகின் 10 வது பணக்கார குடும்பம் என்ற குற்றச்சாட்டுக்கு மு.க.ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும்: எஸ்.பி.வேலுமணி

sp-velumani

வாரிசு அடிப்படையில் திமுகவின் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருவதாகவும் உலகின் 10 வது பணக்கார குடும்பம் என்ற குற்றச்சாட்டுக்கு விளக்கம் சொல்லிவிட்டு ஸ்டாலின் கேள்வி எழுப்பட்டும் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Advertisment

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவரிடம், மு.க.ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டுக்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,

பாரம்பரிய மிக்க ஒரு கட்சியான திமுகவில் வாரிசு அடிப்படையில் தலைவராக தேர்வு செய்யப்பட்டு மு.க.ஸ்டாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை கூறி வருகிறார். உலகின் பணக்கார குடும்பங்களில் 10வது குடும்பம் எனக் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து முதலில் ஸ்டாலின் விளக்கம் அளிக்க வேண்டும். அதிமுக அரசின் சாதனைகளை பொறுத்துக்கொள்ள முடியாமல் ஸ்டாலின் தொடர்ச்சியாக குற்றம்சாட்டிவருகிறார்.

முந்தைய திமுக ஆட்சியில் குடிநீர் திட்டங்களுக்காக 7 ஆயிரம் கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்ட நிலையில் அதிமுக அரசு 5 ஆண்டுகளில் 21 ஆயிரத்து 988 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. மாநிலம் முழுவதும் 4 ஆயிரத்து 900 கோடி மில்லியன் லிட்டராக இருந்த குடிநீர் வினியோகத்தில் 2400 மில்லியன் லிட்டர் கூடுதலாக வழங்கப்பட்டு வருகிறது. 8 கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு டெண்டர் வழங்காமல் பாதியிலேயே திமுக அரசு விட்டுச்சென்றது. அந்த திட்டங்கள் அனைத்தும் தற்போது அதிமுக ஆட்சியில் முழு வேகத்தில் நடந்து வருகிறது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

இதே போல் சாலை, பாலங்கள், வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட 7 துறைகளில் அதிமுக அரசு முனைப்புடன் திட்டங்களை செயல்படுத்தியுள்ளது. அனைத்து டெண்டர்களும் இணைய வழி டெண்டர்களாகவே வழங்கப்பட்டு வருகிறது. எல்.ஈ.டி விளக்குகள் தொடர்பான குற்றச்சாட்டில் உண்மை இல்லை. 7 ஆண்டு பராமரிப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில் டெண்டர்கள் விடப்பட்டுள்ளதால் ஆண்டுக்கு 300 கோடி ரூபாய் வரை அரசுக்கு மின் கட்டணம் மிச்சமாகியுள்ளது.

ஒரு கட்சிக்கு தலைவராக இருந்து கொண்டு ஸ்டாலின் வெளியிட்டுள்ள இந்த குற்றச்சாட்டு அதிர்ச்சி அளிப்பதாகவும் ஸ்டாலின் துணை முதலமைச்சராக ஆட்சியில் இருக்கும் போது ஈழப்படுகொலைகளை தடுத்திருக்கலாம். அப்போது மவுனமாக இருந்து விட்டு தற்போது பேசுவது ஏன்? ஸ்டாலின் ஒரு கட்சிக்கு தான் தலைவராகி இருக்கிறார் முதலமைச்சர் ஆகவில்லை. அவர் முதல்வராகிவிட்டதாக நினைத்துக்கொண்டு குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறார் என அவர் கூறியுள்ளார்.

mk stalin worlds 10th richest family
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe