Advertisment

'அந்தத் திருமணத்தில் நானும் அண்ணன் அழகிரியும் மாப்பிள்ளை தோழர்கள்' - நினைவை பகிர்ந்த மு.க.ஸ்டாலின்

MK Stalin shared the memory!

Advertisment

முன்னாள் முதல்வர் கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதனின் திருமணத்தில் தானும் அழகிரியும் மாப்பிள்ளை தோழர்களாக இருந்ததாக சண்முகநாதனுடனான நினைவுகளைத்தமிழக முதல்வர் ஸ்டாலின் திருமண விழாவில் பகிர்ந்துகொண்டார்.

கலைஞரின் உதவியாளராக இருந்த சண்முகநாதனின் பேரன்அரவிந்த் ராஜ்-பிரியதர்சினியின் திருமண விழா அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கவிஞர் வைரமுத்து ஆகியோர் பங்கு பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய மு.க.ஸ்டாலின், ''நான் இந்தப் புகழை அடைந்ததற்கு சண்முகநாதனும் காரணம். சண்முகநாதன் திருமணத்தில் நான் மட்டுமல்ல எனது அண்ணன் அழகிரி அவர்களும், குடும்பத்தில் உள்ள சகோதரர்கள் அத்தனை பேரும் மாப்பிள்ளை தோழர்களாக இருந்து அந்த விழாவை நடத்தி வைக்கக்கூடிய ஒரு வாய்ப்பு எங்களுக்கு கிடைத்தது. அந்த அளவிற்கு எங்கள் குடும்பத்தில் ஒருவராக சண்முகநாதன் இருந்தார். அவரை யாரும் கலைஞரின் செயலாளர் என்று அழைக்க மாட்டோம். அப்படிப் பார்த்ததும் இல்லை. நான் எப்படி கலைஞரின் மகனோ அதேபோல்தான் அவரையும் மகனாகவே கலைஞர் பார்த்தார்'' என்றார்.

azhakiri kalaingar
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe