mk stalin

Advertisment

விழுப்புரம் மாவட்டம் வானூரில் கட்டப்பட்ட புதிய சமத்துவபுரத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்.விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகேயுள்ள கொழுவேரி என்ற இடத்தில் கட்டப்பட்ட 100 சமத்துவபுர குடியிருப்புகளை முதல்வர் திறந்துவைத்தார். ரூ.2 கோடியே 88 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள இந்தக் குடியிருப்புகளைத் திறந்து வைத்த முதல்வர், அதன் சாவிகளை பயனாளிகளிடம் வழங்கினார்.

பின், ஒழிந்தியாம்பட்டு கிராமத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், ரூ.42.69 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழங்கினார். அந்த விழாவில் தந்தை பெரியார் இல்லையென்றால் நாமெல்லோரும் இல்லை, தமிழகத்தின் முன்னேற்றமும் இல்லை எனப் பேசிய முதல்வர் ஸ்டாலின், திமுக ஆட்சியில் நிம்மதியாக உள்ளதாக மக்கள் பாராட்டிவருவதாகவும் பெருமிதம் தெரிவித்தார்.