திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
திரைத்துறையில் சிறந்த விளங்கிய வாழ்நாள் சாதனையாளர்களுக்கு கலைஞர் நினைவு கலைத்துறை வித்தகர் விருது வழங்கப்படும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்தாண்டு அவ்விருதிற்கு திரைப்பட வசனகர்த்தா ஆரூர் தாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார். தி.நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு நேரில் சென்று இந்த விருதை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
1958ஆம் ஆண்டு வெளியான வாழ வைத்த தெய்வம் படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமான ஆரூர் தாஸ், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.