Advertisment

நாங்குநேரியில் மு.க. ஸ்டாலினின் பிளான் இதுதான்...

நாங்குநேரியில் மு.க ஸ்டாலின் 9 நாட்கள் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபடுகிறார்.

Advertisment

mk stalin

அடுத்த மாதம் 21-ம் தேதி நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளுக்கான இடைத்தோ்தல் நடக்கிறது. இதில் விக்கிரவாண்டியில் திமுக சார்பில் புகழேந்தி போட்டியிடுகிறார். அதே போல் நாங்குநேரியில் காங்கிரஸ் சார்பில் ரூபி மனோகரன் போ்டியிடுகிறார் என்று நேற்று இரவு காங்கிரஸ் தலைமை அறிவித்துள்ளது.

இதற்கிடையில் ஏற்கனவே திமுக நாங்குநேரி தொகுதிக்கான ஐ. பெரியசாமி தலைமையிலான தோ்தல் பணிக்குழுவையும் அறிவித்துள்ளது. இந்த நிலையில் ரூபி மனோகரனை ஆதரித்து மு.க ஸ்டாலின் 9 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருப்பதாக திமுக தலைமை அறிவித்துள்ளது.

Advertisment

இதில் முதல் கட்டமாக அடுத்த மாதம் அக்டோபா் 5, 6, 12, 13, 14 மற்றும் இரண்டாம் கட்டமாக 9, 10, 15, 16 ஆகிய நாட்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். அவா் தொகுதியில் எந்தெந்த பகுதியில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார் என்பதை தோ்தல் பணிக்குழுவினா் முடிவு செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதான் நாங்குநேரி இடைத்தேர்தலுக்கான ஸ்டாலினின் பிரச்சார திட்டம்...

mk stalin
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe