தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசுபொறுப்பேற்றதைத்தொடர்ந்துஇந்து சமயஅறநிலையத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகளை அத்துறையின் அமைச்சர் சேகர்பாபு முன்னெடுத்து வருகிறார். அன்னைத்தமிழில் அர்ச்சனை, அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் உள்ளிட்ட திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வரும் நிலையில், கோவிலில் மொட்டை அடிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும்திட்டத்தைத்தமிழக முதல்வர் தற்பொழுதுதொடங்கிவைத்துள்ளார்.
சென்னை வேப்பேரியில் இந்ததிட்டத்தைத்தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். மொத்தம் 349 கோவில்களில் உள்ள 1,744 பணியாளர்களுக்கு மாத ஊக்கத்தொகையாக 5,000 ரூபாய் வழங்கப்பட இருக்கிறது. இந்தஊக்கத்தொகை வழங்கும்திட்டத்தைத்துவக்கிவைத்த முதல்வர் அரசி, பருப்பு, தேயிலை உள்ளிட்ட 14 பொருட்கள் கொண்ட மளிகை தொகுப்பையும் பணியாளர்களுக்கு வழங்கினார்.