Advertisment

கொடைக்கானலில் முதல்வர்; செல்ஃபி எடுத்துக்கொண்ட சுற்றுலாப் பயணிகள்

mk stalin at Kodaikanal; Tourists taking selfies

தமிழகத்தில் நாடாளுமன்றத்தேர்தல் நடந்து முடிந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தற்போது ஓய்வெடுப்பதற்காக தனது குடும்பத்துடன் நேற்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்து அங்கிருந்து சாலை மார்க்கமாக வாகனம் மூலம் கொடைக்கானல் வந்தடைந்தார்.

Advertisment

அதனையடுத்து பாம்பார்புரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தங்கி ஓய்வெடுத்த நிலையில் இன்று மாலை வேளையில் பசுமை பள்ளத்தாக்கு அருகே இருக்கக்கூடிய கால்ப் மைதானத்தில் சிறிது நேரம் கால்ப் விளையாடினார். அப்போது அந்த மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்த சுற்றுலாப்பயணிகளுடன் சிறிது நேரம் உரையாடினார். அதனைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் வந்து இந்தச் சுற்றுலாப் பணிகள் முதல்வர் ஸ்டாலின் விளையாடியதை ஆர்வத்துடன் கண்டு ரசித்து சென்றனர். மைதானத்தில் விளையாடிவிட்டுத் திரும்பி வரும்பொழுது இங்கிருந்த சுற்றுலா பணிகள் மற்றும் கடை வியாபாரிகளிடம் வணக்கம் தெரிவித்தும் நலம் விசாரித்தும் நன்றி தெரிவித்தார். சுற்றுலாப் பயணிகள் அவருடன் செல்பி புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.

Advertisment
kodaikanal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe