style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் ஸ்டாலின்,
வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி கட்சிகள் அறிவிக்கப்பட்டு, தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்டுள்ளது. எந்தெந்த தொ
தேமுதிக துணைச்செயலாளர் சுதீஷ் நேற்று செய்தியாளர் சந்திப்பில் பேசியது தொடர்பான கேள்விக்கு,
நான் அதற்கெல்லாம் பதில் சொல்ல தயாராக இல்லை. நேற்றைய தினம் திமுக பொருளாளர் மிக துல்லியமாக, ஆதாரங்களோடுஅதற்கு பதில் சொல்லியுள்ளார். அதைப்பற்றி பேசி நேரத்தை வீணடிக்கவில்லை.
திமுக பொருளாளர் வீட்டை தேமுதிகவினர் முற்றுகையிட்டதை அடுத்து அவரது வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளதே? என்ற கேள்விக்கு,
ஒருவேளை மீண்டும் தேமுதிக திமுகவுடன் கூட்டணி பேச வந்துவிடுமோ என்ற பயத்திலோ அல்லதுதடுத்து நிறுத்தவோ இந்த பாதுகாப்பு போட்டிருக்கலாம்.
ரஃபேல் ஆவணங்கள் திருடுபோயுள்ளதே என்ற கேள்விக்கு,
ஆவணங்களையே பாதுகாக்கமுடியாத மோடி எப்படி நாட்டை பாதுகாப்பார் என்பதுதான் எங்கள் கேள்வி. எனவேதான் இந்த அணி ஒன்று சேர்ந்திருக்கிறது. அந்த மோடிஅரசை நிச்சயம் தோற்கடிப்போம்.
தற்போது அடிக்கடி தமிழகம் வருகிறாரே மோடி என்ற கேள்விக்கு,
மோடி தேர்தலுக்காக ஒரு ஸ்டண்ட் நாடகத்தை நடத்தி வருகிறார் அவ்வளவுதானே தவிர வேறு ஒன்றுமில்லை என்றார்.