கொளத்தூர் தொகுதியில் மு.க ஸ்டாலின் இன்று வேட்புமனு தாக்கல்!

ர

தமிழக தேர்தல் களம் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் சில வாரங்களில் தமிழகத்தில் சட்டமன்ற பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அதிமுக மற்றும் திமுக வேட்பாளர்கள் தங்களின் வேட்புமனுவை தாக்கல் செய்து வருகிறார்கள். அந்த வகையில் மீண்டும் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட உள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின் இன்று (15.03.2021) வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். 1984ஆம் ஆண்டு முதல் தேர்தலில் போட்டியிட்டு வரும் ஸ்டாலின், 9வது முறையாக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளார். 2011 மற்றும் 2016ஆண்டு சட்டமன்றத் தேர்தல்களில் கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டு ஸ்டாலின் வெற்றிபெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

stalin
இதையும் படியுங்கள்
Subscribe