பருவமழை தொடங்கிய நிலையில் சாலையோரங்களில் தேங்கும் நீரால் டெங்கு கொசுக்களில் உற்பத்தி அதிகரித்து வருகிறது. இதனால், சென்னை மட்டும் இல்லாமல் தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சல் பாதிப்பால் பலர் உயிரிழந்துள்ளனர். டெங்கு காய்ச்சல் பாதிப்பை தடுப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் அரசு சார்பிலும், தனியார் தொண்டு நிறுவனங்கள் சார்பிலும் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், இன்று சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நிலவேம்பு கசாயத்தை வழங்கினார்.