/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/uyiy_15.jpg)
“நான் அறிக்கை நாயகன் என்றால், முதல்வர் பழனிசாமி ஊழல் நாயகன்” என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
சென்னை கொளத்தூரில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மு.க. ஸ்டாலின் இன்று வழங்கினார். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகளை வழங்கியதோடு புயலால் சேதமடைந்த பகுதிகளையும், வெள்ளத்தால் இடிந்த வீடுகளையும் ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் பேசினார். வெள்ள பாதிப்பு தொடர்பாக பேசிய அவர், "தமிழக அரசு வெள்ள பாதிப்பு தொடர்பாக சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவில்லை, இதை பற்றி நாம் கேள்வி எழுப்பினால், என்னை அறிக்கை நாயகன் என்று கூறுகிறார். நான் அறிக்கை நாயகன் என்றால் எடப்பாடி பழனிசாமி ஊழல் நாயகன். ரஜினி அறிவிப்பு பற்றி என்னிடம் தொடர்ந்து கேள்விகளை எழுப்புகிறீர்கள், இது ஜனநாயக நாடு யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம். முதலில் அவர் கட்சி ஆரம்பிக்கட்டும்,பிறகு அதுதொடர்பாக நான் கருத்து தெரிவிக்கிறேன்" என்றார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)