Advertisment

பாரத் பயோடெக் நிறுவனத்துடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!  

MK Stalin consults with Bharat Biotech

தமிழகத்தில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஜூன் 7 வரை முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் தற்போது வரை நடைமுறையில் உள்ளது.முழு ஊரடங்கின் பலனாக சில நாட்களாக தமிழகத்தில் கரோனோ ஒருநாள் பாதிப்பு எண்ணிக்கை என்பது குறைந்து வருகிறது. ஆனால் உயிரிழப்பு என்பது மட்டும் குறையாத நிலையில், தமிழகத்தில் கரோனா தடுப்பூசி போடும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேலும் தீவிரப்படுத்தி வருகிறது.

Advertisment

இந்நிலையில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த ஆலோசனையில் அரசு அதிகாரிகள் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனத்தின் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் செங்கல்பட்டில் உள்ள தடுப்பூசி தயாரிப்பு ஆலையில் மருந்து பொருட்களை உற்பத்திசெய்வதற்கான திட்டங்கள் குறித்து மத்திய அரசுடன் பேச்சு நடத்தப்பட்டது. விரைவாக அது குறித்து முடிவெடுக்கப்படும்,செயல்பாட்டுக்கு வரும் என நம்பப்படுகின்றநிலையில், தற்போது இந்த ஆலோசனைநடைபெற்று வருகிறது.

Advertisment

corona virus meetings stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe