தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் முதல்வர் ஸ்டாலின் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். காணொளி வாயிலாக நடைபெறும் இந்த ஆலோசனையில் அரசின் திட்டங்கள் செயல்படுத்தப்படுவது மற்றும் தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு குறித்து ஆலோசிக்கப்பட உள்ளதாகதலைமைச் செயலக வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.