கடலூரில் வீட்டின் சுவர் இடிந்து பலியான மூன்று பேரின் குடும்பத்தாருக்கு மு.க. ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், ஒரு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார். மேலும் பலத்த மழையால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து நிவாரண பொருட்களை வழங்கினார்.

  MK Stalin

Advertisment

பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், இந்த பருவ மழையில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை உணர்ந்து, முன்கூட்டியே எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காததால் பொதுமக்கள் பெரும் அவதிக்கு உள்ளாகியிருக்கின்றனர்" என்று அதிமுகவை குற்றம்சாட்டினார். அப்போது முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் உடனிருந்தனர்.