Advertisment

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்வதால் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது: ஜெயக்குமார் கிண்டல்!

ஸ்ரீரங்கம் கோயிலுக்கு செல்வதால் மு.க.ஸ்டாலின் முதல்வராக முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Advertisment

இதுகுறித்து இன்று காலை பட்டினப்பாக்கத்தில் செய்தியளர்களை சந்தித்த அவர்,

Advertisment

கடவுள் பக்தி விவகாரத்தில் தி.மு.க கொள்கை என்ன என்பது தெரியவில்லை. ஸ்ரீரங்கம் கோயிலுக்கு சென்றிருந்த குமாரசாமி முதல்வரானதால் அங்கு சென்றால் மு.க.ஸ்டாலினும் முதலமைச்சராக ஆகிவிடலாம் என நினைத்தால் முடியாது.

பொறுப்புள்ள அமைச்சர் பதவியில் இருந்துகொண்டு, பொன்.ராதாகிருஷ்ணன் பொத்தாம் பொதுவாக குற்றம்சாட்டக் கூடாது. தி.மு.க-வுடன் எங்களுக்கு கூட்டு கிடையாது. எங்களுக்கு வாழ்நாள் முழுவதும் அரசியல் ரீதியான ஒரே எதிரி திமுக தான். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

admk jayakumar mk stalin
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe