தமிழகத்தின் முதலமைச்சராக பதவியேற்க உள்ள திமுகதலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (04/05/2021) அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், "செய்தித்தாள், காட்சி, ஒலி ஊடகங்களில் பணியாற்றும் ஊழியர்கள் முன்களப் பணியாளர்களாகக் கருதப்படுவார்கள். முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகள், சலுகைகள் பத்திரிகையாளர்களுக்கும் வழங்கப்படும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் மே 7ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவியேற்க உள்ள நிலையில், இத்தகைய அறிவிப்பு வெளியாகியுள்ளது.