Skip to main content

புலம்பெயர் ஈழத் தமிழர்களுக்கு ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள்! கனிமொழியின் முயற்சிகளுக்கு வெற்றி! 

Published on 27/08/2021 | Edited on 27/08/2021

 

M.K. Stalin announce various plans for Eelam Tamilians

 

தி.மு.க. மாநில மகளிரணி செயலாளரான கனிமொழி எம்.பி., சில வாரங்களுக்கு முன் தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் முகாமைப் பார்வையிட்டார். அவர், துத்துக்குடி மாவட்டத்தில் உள்ள தாப்பாத்தி, குளத்துள்வாய்பட்டி, மாப்பிளையூரணி ஆகிய மூன்று முகாமுக்கும் விசிட் அடித்தார். அவரைக்கண்டதும், அங்கிருந்த புலம்பெயர் ஈழத் தமிழர்கள், ஆரவாரமாய் வரவேற்று தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். முகாமில் வசிக்கும் தாய்மார்கள் பாசத்தோடு, கனிமொழியை அவரவர் வீடுகளுக்கும் அழைத்தனர். அவர்களின் அன்பிற்கு இசைந்து ஒவ்வொரு வீடாகச் சென்று பார்வையிட்டார்.  முகாமில் வசிக்கும் 475 குடும்பங்களுக்கும் கரோனா நிவாரணமாக தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளை வழங்கினார். 

 

அப்போது, மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவரை அழைத்து அன்பாக அவருக்குப் பண உதவியும் செய்தார். அங்கு வசித்து வரும் குடும்பங்களுக்கு கழிப்பறை வசதிகள் சரியாக இல்லை என்றும், அந்தப் பகுதியில்  மின் வயர்கள் தாழ்வாகச் செல்வதால் தாங்கள் ஆபத்தை எதிர் நோக்கி இருப்பதாகவும் தெரிவித்தனர். மேலும், கூடுதலாகக் குப்பைத் தொட்டிகள், தண்ணீர் தேக்கத் தொட்டிகள் வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை வைத்ததோடு, தங்களின் நிரந்தர துயரத்தைத் தீர்க்க உதவும்படியும் கண்ணீர் மல்கக் கேட்டுக்கொண்டனர். 

 

M.K. Stalin announce various plans for Eelam Tamilians

 

அதையெல்லாம் கேட்டு குறிப்பெடுத்துக்கொண்ட கனிமொழி, அவர்களின் நிலை குறித்தும்,  தேவைகள் குறித்தும் முதல்வரின் கவனத்திற்கு உடனடியாக எடுத்துச் சென்றார். அதனைத் தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், முகாமில் இருக்கும் புலம்பெயர் ஈழத் தமிழர்களின் நல்வாழ்வுக்கான பல்வேறு திட்டங்களை, இன்று சட்டப் பேரவையில் அறிவித்தார்.

 

அவர் தனது உரையில், “கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது என்றால், கடல் கடந்து வாழும் தமிழர்களின் கண்ணீரால்” என்று எழுதினார் பேரறிஞர் அண்ணா. அத்தகைய பேரறிஞர் அண்ணாவினுடைய வழி நடக்கக்கூடிய இந்த அரசின் சார்பில், கடல் கடந்து வந்த இலங்கைத் தமிழ் மக்களின் கண்ணீரைத் துடைக்கக்கூடிய வகையில் சில அறிவிப்புகளை சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் இன்று வெளியிட நான் விரும்புகிறேன்” என்ற முன்னுரையுடன் அவர் ஏராளமான திட்டங்களை அறிவித்திருக்கிறார். இவற்றை அறிந்த புலம்பெயர் ஈழத் தமிழர்கள், கனிமொழியிடம் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்து வருவதோடு, முதல்வர் ஸ்டாலினுக்கும் தங்கள் நெஞ்சார்ந்த நன்றிகளை ஆனந்தத் கண்ணீரோடு தெரிவித்து வருகின்றனர். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கணேசமூர்த்தி மறைவு; அரசியல் தலைவர்கள் இரங்கல்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Ganesamurthy's demise; Political leaders condole

ம.தி.மு.க. எம்பி கணேசமூர்த்தி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ஈரோடு பாராளுமன்றத் தொகுதி எம்பியான கணேசமூர்த்தி மதிமுகவின் பொருளாளராகப் பணியாற்றி வந்தார். சென்ற தேர்தலில் ஈரோடு தொகுதி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது. அப்போது உதயசூரியன் சின்னத்தில் நிற்க வேண்டிய சூழல் மதிமுகவுக்கு ஏற்பட்டதால் கணேசமூர்த்தி உதயசூரியன் சின்னத்தில் நின்று பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதன் பிறகு கடந்த ஐந்து வருடமாக தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியைத் தொடர்ந்து மக்களுக்குப் பணியாற்றி வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை திடீரென ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கணேசமூர்த்தி தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.  வீட்டில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட கணேசமூர்த்தி. சல்பாஸ் மாத்திரை எனப்படுகிற உயிர்க்கொல்லி மாத்திரையை அவர் விழுங்கியது தெரியவந்தது. ஈரோடு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் பின்னர் கோவையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில், கோவை அவிநாசி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சை பெற்று வந்த கணேசமூர்த்தி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை தரப்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன. இன்று அதிகாலை 5.05 மணிக்கு திடீரென சிகிச்சையில் இருந்த அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. கணேசமூர்த்தியின் உயிரிழப்பு காரணமாக மதிமுக கட்சியினர் மற்றும் கூட்டணிக் கட்சியினர் மருத்துவமனைக்கு வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

nn

அவரின் மறைவுக்கு அவரது சொந்த கட்சியைச் சேர்ந்த வைகோ, அதிமுகவின் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ள நிலையில், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்த செய்திக் குறிப்பில், 'ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைந்த செய்தி அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன். ஆற்றல்மிகு தளகர்த்தரான கணேசமூர்த்தியின் மறைவு சொல்லொணாத் துயரைத் தந்துள்ளது. அவர் பிரிவால் வாடும் மதிமுக தொண்டர்கள், திராவிட இயக்க பற்றாளர்களுக்கு என்னுடைய இரங்கல்' எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல் 'மதிமுகவின் மூத்த அரசியல் முன்னோடி கணேசமூர்த்தி காலமான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. கணேசமூர்த்தியை பிரிந்து வாடும் குடும்பத்தார், வைகோ உள்ளிட்ட நண்பர்களுக்கு ஆறுதல்' என கம்யூனிஸ்ட் கட்சியின் முத்தரசன் தெரிவித்துள்ளார்.

Next Story

“அ.தி.மு.க., பா.ஜ.க.வுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தரக்கூடிய தேர்தல் இது” - கனிமொழி எம்.பி.!

Published on 26/03/2024 | Edited on 26/03/2024
"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அந்த வகையில், தி.மு.க, அ.தி.மு.க., காங்கிரஸ், தேமு.தி.க., பா.ம.க., பா.ஜ.க. உட்படப் பல்வேறு கட்சிகள் தேர்தல் கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள் முடிவடைந்து வேட்பாளர்கள் அறிவிப்பு, தேர்தல் பிரச்சாரம், வேட்பு மனுத்தாக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் மக்களவை தொகுதிகளுக்கான தி.மு.க. மற்றும் அதன் கூட்டணியின் வேட்பாளார்களை ஆதரித்து தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள எட்டையபுரத்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரப்புரை இன்று (26.12.2024) மேற்கொண்டார்.

முன்னதாக தூத்துக்குடி தி.மு.க. வேட்பாளரும், தி.மு.க. துணைப் பொதுச செயலாளருமான கனிமொழி எம்.பி. பேசுகையில், “சில மாதங்களுக்கு முன்னர் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தின் கரிசல் பூமி கண்ணீரில் தவித்துக் கொண்டிருந்தபோது மத்திய அரசு கைகட்டி பார்த்துக் கொண்டிருந்தது. ஆனால் நான் இருக்கிறேன் என கருணையோடு ஓடி வந்தது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எந்த பகுதியில் இருந்தாலும் நிவாரணம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கியது முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் மட்டும் தான். இந்திய சரித்திரத்திலேயே இல்லாத அளவிற்கு வீடு இடிந்தவர்களுக்கு 4 லட்ச ரூபாயை தி.மு.க. அரசு.

"ADMK, BJP This is an election that can teach parties a good lesson" - Kanimozhi MP

பாதிக்கப்பட்ட அனைவருக்கும் உதவிக்கரம் நீட்டுவது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தான். ஆனால் இங்கு ஓட்டு கேட்க மட்டுமே வந்து கொண்டிருக்கிற பிரதமர் நிவாரண நிதியையும் கொடுப்பதில்லை. மாநிலத்திற்கு கொடுக்க வேண்டிய நிதியையும் கொடுப்பதில்லை. நம்மிடம் ஒரு ரூபாயை வரியாக வாங்கினால் 26 காசுகளை மட்டுமே கொடுக்கின்றனர். ஆனால் உத்தரப்பிரதேசத்திற்கு 2 ரூபாய் 2 காசுகள் என இருமடங்காக கொடுக்கின்றனர். இப்படி தமிழ்நாட்டை வஞ்சித்துக் கொண்டிருக்கிற, ஓர வஞ்சனை செய்துகொண்டிருக்க கூடிய பா.ஜ.க.வோடு இத்தனை ஆண்டுகளாக எடுத்த மக்கள் விரோத, சிறுபான்மையினருக்கு விரோதமான, விவசாயிகளுக்கு விரோதமான அத்தனை சட்டங்களையும் ஆதரித்து வாக்களித்தது அ.தி.மு.க.. ஆனால் இன்று பிரிந்துவிட்டோம் என்று நாடகமாடிக் கொண்டிருக்க கூடிய அ.தி.மு.க. உள்ளிட்ட இரண்டு கட்சிகளுக்கு நல்ல பாடத்தை சொல்லித் தர கூடிய தேர்தல் இது” எனப் பேசினார்.