/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/88_35.jpg)
தமிழகத்தைச் சேர்ந்த 18 வயதான இளம் டேபிள் டென்னிஸ் வீரர் விஸ்வா தீனதயாளன் சாலை விபத்தில்உயிரிழந்தார்.
83ஆவது சீனியர் தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியில் பங்கேற்பதற்காக கௌகாத்தியில் இருந்து ஷில்லாங் செல்லும் வழியில் இந்த சாலை விபத்தானது நடந்தது. விஸ்வா தீனதயாளன் பயணித்த கார் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது எதிரே அதிவேகத்தில் வந்த சரக்கு லாரி மோதி இந்த விபத்து நடந்ததாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில் விஸ்வா தீனதயாளன் மற்றும் அவரது கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். விஸ்வா தீனதயாளன் உடல் விமானம் மூலம் தமிழகம் கொண்டுவரப்பட்ட நிலையில், அவரது உடலுக்கு உறவினர்கள் அஞ்சலி செலுத்தினர்.
இந்த நிலையில், விஸ்வா தீனதயாளன் குடும்பத்திற்கு 10 லட்ச ரூபாய் நிதியுதவி வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து இந்த நிதி வழங்கப்பட உள்ளது.
விஸ்வா தீனதயாளன் மரணச் செய்தி வெளியானதும், வளர்ந்து வரும் இளம் சாதனையாளரான விஸ்வா தீனதயாளன் மரணம் வார்த்தைகளால் விவரிக்க முடியாத பேரதிர்ச்சியாக உள்ளதாகவும் மிகுந்த வலியைத் தருவதாகவும் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)