ADVERTISEMENT

தேர்தல் வெற்றியை மிஞ்சிய உதயநிதிக்கான பதவி கொண்டாட்டம்

12:40 AM Jul 05, 2019 | Anonymous (not verified)

ADVERTISEMENT

திமுகவில் உள்ள அணிகளில் இளைஞரணி என்பது மிக முக்கியமானது. தற்போது திமுகவின் தலைவராக உள்ள மு.க.ஸ்டாலினால் கோபாலபுரம் பகுதி இளைஞர்களை கொண்டு துவங்கப்பட்டது. பின்னர் அது திமுகவின் அதிகாரபூர்வ அணியாக அங்கீகாரம் பெற்றது. திமுக மாநில இளைஞரணி செயலாளராக மு.க.ஸ்டாலின் நீண்ட ஆண்டுகள் இருந்து வந்தார்.

ADVERTISEMENT

சில ஆண்டுகளுக்கு முன்பு, ஸ்டாலின், திமுகவின் பொருளாளர் பின்னர் செயல் தலைவரான பின்பு மாநில இளைஞரணி செயலாளர் பதவி முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதனுக்கு வழங்கப்பட்டது.

இந்நிலையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில், முரசொலி நிர்வாக இயக்குநராக இருந்த திமுக தலைவர் ஸ்டாலின் மகன் நடிகர் உதயநிதிஸ்டாலின் களமிறக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து திமுகவுக்காக தேர்தல் பிரச்சாரம் செய்தார். வெற்றிக்கு அவரின் பிரச்சாரமும் ஒரு பங்கு வகித்தது.

இதனால் அவருக்கு கட்சியில் முக்கியத்துவம் தரவேண்டுமென அன்பில் மகேஷ் எம்.எல்.ஏ, மா.சுப்பிரமணி எம்.எல்.ஏ போன்ற பலரும் ஸ்டாலினுக்கு நெருக்கடி தந்து வந்தனர். உதயநிதியின் தாயும் தனது கணவரும், திமுக தலைவரான ஸ்டாலினிடம் சிபாரிசு செய்ய அதன் அடிப்படையில் நீண்ட ஆலோசனைக்கு பிறகு ஜீலை 4ந்தேதி மாநில இளைஞரணி செயலாளராக உதயநிதியை நியமனம் செய்து அறிவித்தார் திமுக பொதுச்செயலாளர் பேராசிரியர் அன்பழகன்.

இந்த அறிவிப்பை பார்த்து, திமுகவை கொள்கை ரீதியாக எதிர்ப்பவர்கள் மற்றும் எதிர்கட்சியை சேர்ந்த பலர், வாரிசு அரசியல் என சமூக வளைத்தளங்களில் எழுதுகின்றனர். அதனையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் இந்த அறிவிப்பு வந்ததும் மாநிலத்தில் உள்ள கட்சி நிர்வாகிகள் சென்னைக்கு படையெடுத்து சென்று இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் வைத்து அவருக்கு வாழ்த்து தெரிவிததனர். வாழ்த்து தெரிவிக்க செல்ல முடியாதவர்கள், தாங்கள் உள்ள பகுதிகளில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 38 இடங்களில் வெற்றி பெற்றபோது கூட இப்படியொரு ஆர்ப்பரிப்பை திமுக நிர்வாகிகள் செய்யவில்லை. உதயநிதிக்கு பதவி தந்ததை கொண்டாடுகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம், வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான நகராட்சி, மாநகராட்சி, பேரூராட்சிகளில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர்.
a

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT