செய்தியாளர்களுக்கு தீனி போடுவதில் பாஜக ஹெச்.ராஜாவினையும், மு.க.அழகிரியையும் யாரும் அவ்வளவு எளிதில் முந்திவிட முடியாது. அந்தளவிற்கு புகைச்சலை உருவாக்கும் வண்ணம் செய்தி கொடுத்த வண்ணமிருப்பவர்கள். அந்த இருவருமே ஒன்று சேர்ந்தால்..?

mk azhagiri meets h raja

Advertisment

Advertisment

சிவகங்கை மாவட்டம் காரைக்குடியிலிருக்கின்றது பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவின் இல்லம். இன்று அவரது இல்லத்திற்கு வருகை தந்த முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, ஹெச்.ராஜாவுடன் தனியறையில் ரகசிய சந்திப்பை நடத்திவிட்டு வெளியில் வரும்போது அங்கு குழுமியிருந்த பத்திரிகையாளர்களை சந்தித்தவர்., " இந்த வாரத்தினில் ஹெச்.ராஜாவின் மகளுக்கு திருமணம் நடைபெறவுள்ளது. என்னால் அந்த திருமணத்திற்கு வர இயலாது என்பதால் முன்கூட்டியே வந்து செல்கின்றேன்." என்றவரிடம் "திமுகப் பொதுக்குழு கூடும் வேளையில் இந்த சந்திப்பு முக்கியவத்துவம் பெறுகின்ற வகையில் உள்ளதே.?" என கேள்வி எழுப்பப்பட, " திமுகப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்..? நான் திமுகவிலேயே இல்லை.. ஆளை விடுங்கப்பா" எனக் கூறிக்கொண்டே நகர்ந்தார் அவர்.

உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கின்ற சூழலில் மு.க.அழகிரி - ஹெச்.ராஜா சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால் அரசியல் வட்டாரத்தில் பரப்பரப்பு எழுந்துள்ளது.