mk

திமுக தலைவர் கலைஞர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை கோபாலபுரம் இல்லத்தில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில், அவரது மகனும் முன்னாள் மத்திய மந்திரியுமான மு.க.அழகிரி கோபாலபுரம் இல்லத்துக்கு வருகை தந்தார்.

Advertisment

அங்கு, கலைஞர் மற்றும் தாயார் தயாளு அம்மாள் ஆகியோரை சந்தித்து அழகிரி உடல்நலம் விசாரித்தார். பின்னர், சிறிது நேரம் கழித்து அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். கடந்த சில நாட்களாக மு.க.ஸ்டாலினை கடுமையாக விமர்சித்து வருகிறார் அழகிரி,

Advertisment

இந்நிலையில், அண்மையில் மதுரையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பேசிய அழகிரி, தி.மு.க.வில் உள்ளவர்கள் கட்சிக்கு உழைக்காதவர்கள். அவர்கள் அனைவரும் பதவிக்காகவே இருக்கிறார்கள். செயல்படாத ஒரு தலைவர் செயல் தலைவர் என்று சென்னையில் இருக்கிறார். ஆனால் செயல்படுகிற செயல் வீரர்கள் அதிகம் பேர் என்னிடம்தான் உள்ளனர் என கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

style="display:inline-block;width:336px;height:280px"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="3041061810">

Advertisment