mk alagiri invite to Supporters on jan 3rd meeting

தமிழகம் முழுவதும் உள்ள ஆதரவாளர்கள் ஜனவரி 3- ஆம் தேதி மதுரை வர வேண்டும் என்று மு.க.அழகிரி அழைப்பு விடுத்துள்ளார்.

Advertisment

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், "வருங்கால அரசியல் நடவடிக்கை குறித்து ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்த இருக்கிறேன். இந்த ஆலோசனை கூட்டம் 03/01/2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 04.00 மணியளவில் மதுரை பாண்டிக்கோவில் அருகே உள்ள துவாரகா பேலசில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதும் உள்ள என் ஆதரவாளர்கள் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அனைவரும் வரும் முகக்கவசம் அணிந்து வர வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment