mk alagiri discussion with supporters at madurai meeting

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரையில் தனது ஆதரவாளர்களுடன் இன்று (03/01/2021) ஆலோசனை நடத்துகிறார்.

Advertisment

மதுரை மாவட்டம், பாண்டிகோவில் அருகே துவாரகா பேலஸில் இன்று (03/01/2021) மாலை 04.00 மணிக்கு தனது ஆதரவாளர்களுடன் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆலோசனை நடத்துகிறார். இந்த ஆலோசனையில் மதுரை உள்பட தமிழகம் முழுவதும் உள்ள மு.க.அழகிரியின் ஆதரவாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

Advertisment

இந்த ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், புதிய கட்சியைத் தொடங்குவது,பிற கட்சிக்கு ஆதரவளிப்பதுஉள்ளிட்டவை குறித்து தனது ஆதரவாளர்களுடன் மு.க.அழகிரி ஆலோசனை நடத்துவார் என்று தகவல் கூறுகின்றன. மேலும் இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தி.மு.க. கட்சியிலிருந்து மு.க.அழகிரி நீக்கப்பட்டு சுமார் 7 ஆண்டுகள் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment