திமுக தலைமைக்கு எதிராக செப்.5ல் பேரணி! - அழகிரி ஆதரவாளர்கள் ஆலோசனை கூட்டம்!

alagiri

திமுகவில் இருந்து அழகிரி உள்பட அவருடைய ஆதரவாளர்களையும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கட்சியில் இருந்து நீக்கி தலைமை உத்தரவிட்டது. அதை தொடந்து அழகிரி அரசியலில் ஆர்வம் காட்டாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் திமுக தலைவர் கலைஞர் மறைந்ததையொட்டி திடீரென அரசியலில் குதித்த, அழகிரி கலைஞரின் உண்மையான தொண்டர்கள் எல்லாம் என் பக்கம் இருக்கிறார்கள் என்று வெளிப்படையாக பத்திரிகையாளர்களுக்கு பேட்டி கொடுத்து விட்டு தற்பொழுது திமுக தலைமைக்கு எதிராக வரும் 5ம் தேதி சென்னையில் பேரணி நடத்தி தனது பலத்தை காட்ட தயாராகி வருகிறார்.

alagiri

அதன் அடிப்படையில் அழகிரி தன் ஆதரவாளர்களை தயார் படுத்தி வருகிறார். அதன் பேரில் தான் தேனி மாவட்டத்தில் அழகிரி ஆதரவாளர்கள் வீரபாண்டியில் ஆலோசணை கூட்டம் நடத்தினார்கள். இக்கூட்டத்திற்கு முன்னாள் பொதுக்குழு உறுப்பினரான போடி சண்முகம் தலைமை தாங்கினார். அதுபோல் முன்னாள் செயற்குழு உறுப்பினரும் பெரியகுளம் நகர செயலாருமான செல்லப்பாண்டி, முன்னாள் துணைத்தலைவரான கம்பம் கருமத்தாம் பட்டியை சேர்ந்த வீரராகவன் உள்பட 50க்கும் மேற்பட்ட முன்னாள் பொருப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

இதில் சென்னையில் நடைபெறும் அழகிரியின் பேரணிக்காக மாவட்டத்திலிருந்து 100 வாகனங்களில் 5000பேரை அழைத்து செல்லவேண்டும் என அழகிரி ஆதரவாளர்கள் பேசி முடித்து இருக்கிறார்கள். அதை தொடர்ந்து மாவட்டத்தில் பொறுப்பில் உள்ள உ.பிகளையும், தொண்டர்களையும் பேரணிக்கு இழுக்கும் முயற்சியில் இப்பவே அழகிரி ஆதரவாளர்கள் தயாராகி வருகிறார்கள்.

M. K. Alagiri
இதையும் படியுங்கள்
Subscribe