
நாகை மாவட்டம் வேதாரண்யம் நகரம், தோப்புத்துறையில் மனிதநேய ஜனநாயகக் கட்சியின் சார்பில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயர்வைக்கண்டித்து, விலை உயர்வைக் குறைக்கக் கோரியும், மத்திய அரசுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆறுமுகச் சந்தியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஆட்டோவை மாட்டு வண்டியில் ஏற்றி கேஸ் சிலிண்டருக்கு மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
திரளானோர் பங்கேற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட துணைச் செயலாளர் S. அகமதுல்லா தலைமை தாங்கினார். மேலும் நகரச் செயலாளர் H. முகமது ஷரிப் மற்றும் நகர நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். அதேபோல் ஒன்றிய விவசாய அணி செயலாளர் கவிஞர் சுப்பிரமணியம், மஜக தகவல் தொழில்நுட்பச் செயலாளர் அல்டாப் பாரக், சிக்கந்தர், அவுலியா, நகர துணைசெயளாலர் முருகானந்தம், மஜீது, மாணவர் இந்தியா நகரச் செயலாளர் சதாம், மஜக தொழில்சங்கப் பிரிவான MJTS செயலாளர் ஆட்டோ அன்சாரி, கோடியக்கரை கிளைச் செயலாளர் ஜாவித், தேத்தாகுடி கிளைச் செயலாளர் நாஜிம்ஆகியோர் பங்கேற்றனர். மஜகவினருடன் சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் இதில் கலந்துகொண்டனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)