MJK support farmers in nagai

Advertisment

டிசம்பர் 8 ஆம் தேதி, மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களையும் எதிர்த்து, டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்திவருகின்றனர். அதற்கு ஆதரவாக, இன்று (08.12.2020) விவசாயச் சங்கங்கள், வணிகர்கள், தொழிலாளர்கள், கட்சிகள், சேவை அமைப்புகள், நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றன.

மனிதநேய ஜனநாயகக் கட்சியினர் இப்போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, இன்று தமிழகம் முழுக்க போராட்டங்களை நடத்திவருகின்றனர்.நாகை மாவட்டம் தோப்புத்துறையில் டிராக்டர், மாட்டு வண்டிகளுடன், விவசாயத் தொழிலாளர்கள் ஏராளமானோருடன் ம.ஜ.க.வினர் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒரு மணி நேர அவகாசத்தில் நடைபெற்ற இப்போராட்டத்தில் ம.ஜ.கபொதுச் செயலாளர் மு.தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ.பங்கேற்று முழக்கங்களை எழுப்பினார். அப்போது வணிகர்கள் அடுத்தடுத்து கடைகளை அடைக்க தொடங்கி ஆதரவளித்தனர். அப்பகுதி முழுக்க பரபரப்பானதும் போக்குவரத்து 15 நிமிடங்கள் நிறுத்தப்பட்டது.

Advertisment

இந்திகழ்வுக்கு மாவட்டத் துணைச் செயலாளர் ஷேக் அகமதுல்லா தலைமை ஏற்றார்.பல்வேறு சமூக ஆர்வலர்களும் இதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்நிகழ்வில் ஏராளமான ம.ஜ.க.வினரும் திரளாகப் பங்கேற்றனர்.