‘The MJK is committed to the nationwide struggle of the peasantry. Support '- Tamimun Ansari

Advertisment

ஒன்றிய அரசு கொண்டுவந்துள்ள மூன்று புதிய வேளாண் சட்டங்களை திரும்ப பெறக் கோரி இந்திய தலைநகர் டெல்லியில் பல மாதங்களாக விவசாயிகள் போராடிவருகின்றனர். இந்நிலையில், வருகின்ற செப் 27 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு டெல்லி விவசாய போராட்டக் குழு அழைப்பு விடுத்துள்ளது. இதற்கு ம.ஜ.க. பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஆதரவு அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தெரிவித்திருப்பதாவது; ‘இந்திய தலைநகர் டெல்லியில், விவசாயிகள் ஒன்றிய அரசின் 3 வேளாண் விரோத சட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து அறவழியில் போராடி வருகிறார்கள்.நாடே கவனிக்கும் களமாக அது மாறியிருக்கிறது. அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகத்தில் நடைபெறும் அனைத்து போராட்டங்களிலும் மனிதநேய ஜனநாயக கட்சி பங்கேற்று வருகிறது. எதிர்வரும் செப்டம்பர் 27 அன்று நாடு தழுவிய போராட்டத்திற்கு டெல்லி விவசாய போராட்டக் குழு அழைப்பு விடுத்திருக்கிறது.

இதற்கு மனிதநேய ஜனநாயக கட்சி முழு ஆதரவை அளிக்கிறது.இக்களத்தில் விவசாய அமைப்புகளோடும், ஜனநாயக சக்திகளோடும் இணைந்து நின்று மஜகவினர் களமாடுவார்கள் என்றும், போராட்டம் ஜனநாயக வழியில் வென்றிட துணை நிற்பார்கள் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.