
தண்ணீர் தொட்டியில் மர்ம நபர்கள் பூச்சி மருந்து கலந்தசம்பவம் நெல்லையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
அண்மையாகவேதமிழகத்தில் நீர் தொட்டிகளில் மனித கழிவுகள் கலக்கப்பட்ட சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் பகுதியில் குடிநீர் தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது. இதேபோல திருவள்ளூரிலும் காஞ்சிபுரத்திலும் பள்ளிகளின் குடிநீர் தொட்டிகளில் மனிதக்கழிவு கலக்கப்பட்டதாக வெளியான செய்திகள் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில், நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே உள்ள துலுக்கர் பட்டியில் தண்ணீர் தொட்டி ஒன்றில் மர்ம நபர்கள் பூச்சி மருந்து கலந்ததாகக் கூறப்படுகிறது. வீட்டு உபயோகம் மற்றும் குடிநீருக்காக பயன்படுத்தப்படும் 60,000 லிட்டர்கொள்ளளவு கொண்ட தொட்டியில் பூச்சி மருந்து கலக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. தொட்டியில் இருந்தமருந்து கலந்த தண்ணீரை ஆய்வுக்காக சுகாதாரத் துறையினர் தற்பொழுது எடுத்துச் சென்றுள்ளனர். தண்ணீர் தொட்டியில் பூச்சி மருந்து கலக்கப்பட்டதாக வெளியான தகவல் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)