Skip to main content

எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்! சிறுமிகளோடு ‘பழகிய’ கணேசன்! -விழி மூடிக் கிடக்கும் விருதுநகர் மாவட்டம்!

Published on 26/02/2020 | Edited on 26/02/2020

விருதுநகர் மாவட்டத்திலுள்ள வத்திராயிருப்பு ஒன்றியத்தில் உள்ளது ரங்கபாளையம். இங்கு அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் சிறுவன் ஒருவனுக்கும், சிறுமிகள் இருவருக்கும், தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்துவந்த வெள்ளைச்சாமி, திருவன், இரணியவீரன், கணேசன், ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ சட்டம் பாய்ந்து, தற்போது அவர்கள் கம்பி எண்ணுகின்றனர்.

 

Misunderstanding of AIDS! Ganesan used little girls! Virudhunagar district in unawareness

 

உரிய மருத்துவ சோதனை மேற்கொள்ளாமல் அவசரகதியில் மேற்கண்ட ஐவர் மீதும்  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தற்போது சர்ச்சை எழுந்துள்ளது. காரணம் – அந்த 5 பேரில் ஒருவரான கணேசன்,  எச்.ஐ.வி. தொற்றுள்ளவர் என்றும் அவரது மனைவி நிறைமதியும்கூட எய்ட்ஸ் பாதிப்புக்குள்ளானவர் என்பதும் தெரியவந்திருக்கிறது.

2019 மார்ச் மாதமே, கணேசனுக்கும் நிறைமதிக்கும் எச்.ஐ.வி. தொற்று இருப்பது கண்டறியப்பட்டு,  எய்ட்ஸ் கட்டுப்பாடு மையம் மருத்துவ உதவிகளைச் செய்துள்ளது. ஆனாலும், இவ்விருவரையும் தொடர் கண்காணிப்பில் வைத்திருக்க அம்மையம் தவறிவிட்டது. இதைத் தனக்கு சாதமாக்கிக்கொண்ட கணேசன், சிறுமிகளை வேட்டையாடியிருக்கிறான்.

 

Misunderstanding of AIDS! Ganesan used little girls! Virudhunagar district in unawareness


கணேசனின் இக்கொடுஞ்செயலுக்கு எய்ட்ஸ் குறித்த தவறான நம்பிக்கையும் ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது. ஆப்பிரிக்காவிலுள்ள சஹாரா பாலைவனத்திற்கு தெற்கிலுள்ள நாடுகள், இந்தியா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில்,  எய்ட்ஸ் குறித்த தவறான புரிதல்கள் உள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது. அது என்னவென்றால், கன்னித்தன்மை உள்ள இளம் பெண்களிடம், சிறுமியரிடமும் உறவு வைத்துக்கொண்டால், எய்ட்ஸ் குணமாகிவிடும் என்பதே. அதனால்தான், ‘மருந்து,  மாத்திரைகள் சரிப்பட்டு வராது.. உயிர் வாழவேண்டுமென்றால் சிறுமிகளோடு பழகவேண்டும்..’ என்பதில் தீவிரமாக இருந்திருக்கிறான், கணேசன்.

எய்ட்ஸ் கணேசனுக்கு மட்டும்தானா? என்று சந்தேகம் வலுத்துள்ள நிலையில், அவனுடன் சிறையில் இருக்கும்,  சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையிலுள்ள திருவனும் இரணியவீரனும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.

இந்த கணேசன், எய்ட்ஸ் குறித்த தவறான புரிதலால் அந்தப் பகுதியில், மேலும் எத்தனை சிறுவர்களிடம் நெருங்கினானோ? இது குறித்தெல்லாம் உடனே விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டியது  அவசியமாகும். ஏற்கனவே, எச்.ஐ.வி. ரத்தம் கர்ப்பிணிக்கு ஏற்றப்பட்ட விவகாரத்தில், சாத்தூர் மற்றும் சிவகாசி அரசு மருத்துவமனைகள் கடும் விமர்சனத்துக்கு ஆளானது. தற்போது, கணேசன் விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. இனியாவது, விழித்துக்கொள்ளுமா விருதுநகர் மாவட்டம்? 

 

 


 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கியது வேட்புமனு பரிசீலனை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Scrutiny of nominations has begun

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. சேலத்தில் திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட செல்வ கணபதியின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இரட்டை வாக்குரிமை சர்ச்சை காரணமாக அவருடைய வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. திருச்சியில் மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவின் மனு ஏற்கப்பட்டுள்ளது. திருச்சியில் அமமுக சார்பில் போட்டியிடும் செந்தில்நாதன் வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது.

மதுரை தொகுதியில் அதிமுக, பாஜக, நாம் தமிழர் வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. நாமக்கல் தொகுதியில் திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சிகளின் வேட்பு மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது. மத்திய சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் மனு ஏற்கப்பட்டுள்ளது. தென் சென்னையில் போட்டியிடும் திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் மனு ஏற்கப்பட்டுள்ளது. பாஜக வேட்பாளர் வினோத் பி. செல்வம் மனுவை ஏற்றுக்கொள்ளக்கூடாது என திமுக தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மனுவை முழுமையாகப் பூர்த்தி செய்து தராததால் திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. வினோத் பி. செல்வத்தின் மனுவை மறு ஆய்வு செய்ய வேண்டும் என திமுக தரப்பு கோரிக்கை வைத்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Next Story

'100 நாள் வேலை ஊதியம்' - மத்திய அரசு வெளியிட்ட திடீர் அரசாணை

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
'100 days of work wages'- Sudden decree issued by the central government

100 நாள் வேலை ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் ஊதியத்தை 319 ரூபாயாக உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.

தற்பொழுது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் தேர்தல் ஆணையத்தின் அனுமதியைப் பெற்று இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக ஒன்றிய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநிலம் வாரியாக 100 நாள் வேலைத் திட்டத்திற்கான ஊதியத்தை ஏற்கனவே அதிகரித்து மத்திய அரசு அறிவித்து வெளியிட்டிருந்த நிலையில் இதற்கான அரசாணை தற்போது வெளியிட்டுள்ளது.

அண்மையில் மகளிர் தினத்தின் போது சமையல் சிலிண்டர் விலை குறைப்பு நடவடிக்கையில் ஒன்றிய அரசு  ஈடுபட்ட நிலையில், தேர்தல் நேரத்தில் பாஜக அரசு வாக்குகளைப் பெற இதுபோன்ற சலுகைகளை அறிவிப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தன. இந்நிலையில் தற்போது தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் 100 நாள் வேலையின் ஊதியத்தை உயர்த்தி மத்திய அரசு வழங்கியுள்ளதையும் எதிர்க்கட்சிகள் விமர்சித்து வருகின்றன.