/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/AIADMK MLA Interview.jpg)
சூலூர் எம்.எல்.ஏ கனகராஜ் கோவையில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர், சின்னபையன் கருணாஸ், அவர் அடக்கி வாசிக்க வேண்டும். இது போன்று பேசுவதை அவர் நிறுத்திக்கொள்ள வேண்டும். ஜெயலலிதா செய்த தவறு கருணாஸிற்கு சீட் கொடுத்தது. இரட்டை இலையில் ஜெயித்து விட்டு இப்போது இரட்டை இலையை விமர்சனம் செய்கிறார். காக்கி சட்டை இருப்பதால்தான் தமிழகம் அமைதி பூங்காவாக இருக்கின்றது. அவரது பேச்சு ஈனதனமான பேச்சு. அதிமுக எம்.எல்.ஏ. என்ற முறையில் வருந்துகின்றேன்.
முதல்வரை அடித்தால் அவர் வாங்கிக்கொள்வார்,புன் சிரிப்புடன் இருப்பார், அவர் இயேசு நாதரை போல. கருணாஸ் பேசியது மன வருத்ததை அளிக்கின்றது. இது சினிமா இல்லை என்பதை அவர் உணர வேண்டும். கண்டிப்பாக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் ஆயிரம் கருணாஸ் உருவாகிவிடுவார்கள்.கண்டிப்பாக கருணாஸை கைது செய்ய வேண்டும் என தெரிவித்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)