Advertisment

காணாமல் போன இளம் பெண் சடலமாக மீட்பு!

Missing young woman recovered as a corpse

ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அருகே வசித்து வருபவர்கள் சத்தியமூர்த்தி - விமலேஸ்வரி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு மகன்கள், ஒரு மகள் உள்ளார். மகள் பிரியங்கா(21), படித்து முடித்துவிட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் செவிலியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் பிரியங்கா கடந்த 3 ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர், அதன்பின்பு வீடு திரும்பவில்லை. மகள் வீட்டிற்கு வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அக்கம்பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். இதனைத் தொடர்ந்து ஊருக்கு பக்கத்தில் உள்ள கிணற்றின் அருகே பிரியங்காவின் காலணி கிடந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது பெற்றோர் உடனடியாக காவல்துறைக்கும், தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் கொடுத்தனர்.

Advertisment

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினர் கிணற்றில் இறங்கி தேடிப்பார்த்தனர். ஆனால் பல மணி நேரம் தேடியும் பிரியங்காவின் உடல் கிடைக்காததால் தீயணைப்புத் துறையினர் திரும்பி சென்றுவிட்டனர். இந்த நிலையில் இன்று பிரியங்காவின் தாத்தாகிணற்றை வந்து பார்த்தபோது, அதில் அவரது உடல் சடலமாக கிடந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தகவலின் பேரில் வந்த போலீசார் பிரியங்காவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இது கொலையா அல்லது தற்கொலையா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment
woman ranipet
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe