Published on 28/11/2021 | Edited on 28/11/2021

கோவையில் பதினொன்றாம் வகுப்பு படித்துவரும் மாணவியைக் காணவில்லை என்று மாணவியின் பெற்றோர் கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்தில் புகாரளித்தனர். புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில், தவ்பீக் என்ற இளைஞரையும் காணாமல் போன மாணவியையும் இளைஞரின் பெற்றோர் காவல் நிலையம் அழைத்து வந்தனர். விசாரணையில் மாணவியின் வீட்டின் அருகில் உள்ள பீடா கடைக்குச் செல்லும் இளைஞருக்கு, அந்த மாணவியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியதால், திருமண ஆசை வார்த்தைகூறி தவ்பீக் மாணவியைத் திருப்பூருக்குக் கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து மாணவியை மீட்ட போலீசார் பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். மேலும் மாணவியை ஆசை வார்த்தைகூறி கடத்தியதாக தவ்பீக் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.