
காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த மாணவி மூன்று நாட்கள் கழித்து ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் கடலூரில் நிகழ்ந்துள்ளது.
கடலூர் மாவட்ட விஜயமாநகரம் புதுவெண்ணைகுழியைச் சேர்ந்த கண்ணகி என்ற பள்ளி மாணவி, கடந்த 18ஆம் தேதி பள்ளிக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில், அவரது பெற்றோரும் உறவினர்களும் பல்வேறு இடங்களில் தேடியும்மாணவி கண்ணகி கிடைக்கவில்லை. இதனைத்தொடர்ந்து மாணவியின் தாய் ராஜலட்சுமி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், மங்கலம்பேட்டை போலீசார் இது தொடர்பாக விசாரணை நடத்திவந்தனர்.
இந்நிலையில், மாணவி காணாமல் போனதிலிருந்துமூன்றுநாட்கள் கழித்து, ரூபநாராயணநல்லூர் ஏரியில் ஒரு சடலம் மிதப்பதாகத் தகவல் வெளியாக, அங்கு சென்ற போலீசார் மற்றும் தீயணைப்புப்படையினர், அந்த சடலத்தை மீட்டனர். இறுதியில் அந்த சடலம் காணாமல் போனதாக தேடப்பட்டுவந்த பள்ளி மாணவி கண்ணகி என தெரியவந்தது. மாணவி கொல்லப்பட்டாரா? அல்லது தற்கொலையா என்பது தொடர்பாக போலீசார் விசாரித்துவருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)