Advertisment

குளத்தைக் காணவில்லை.... சுவரொட்டி ஒட்டிய கிராம மக்கள்! 

Missing pond .... Villagers pasting the poster!

திரைப்படத்தில் நடிகர் வடிவேலு கிணறு காணவில்லை என்று காவல்துறையினரிடம் புகார் அளிப்பார். இது நகைச்சுவையாக, இருந்தாலும் தற்போது உண்மையாலுமே கிணறு, ஏரிகள், குளங்கள் காணவில்லை என்று கிராம மக்கள் காவல்துறையினரிடம் புகார் அளிப்பது அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, எங்கள் ஊரில் இருந்த குளம் ஒன்றை காணவில்லை என்று கிராம மக்கள் சுவரொட்டிஒட்டியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

திருவாரூர் மாவட்டம், வலங்கைமான் அருகே உள்ள சந்திரசேகரபுரம் ஊராட்சியில் ஏழு குளங்கள் இருந்த நிலையில், தற்போது அவை ஆறு குளங்களாகக் குறைந்துள்ளதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர். ஒரு குளம் இருந்த இடத்தை ஆக்கிரமித்து வாழைச்சாகுபடி செய்து வருவதாகவும், இது தொடர்பாக, புகார் அளித்தாலும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, குளத்தை மீட்க வேண்டும் என கோரிக்கை விடுத்து தங்கள் பகுதி முழுவதும் சுவரொட்டிஒட்டியுள்ளனர்.

Advertisment

Tiruvarur
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe