மதுரை எஸ்.எஸ். காலனியைச் சேர்ந்த பெரோஸ்கான் என்பவர் வளர்த்து வந்த நாய் ஒன்று கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி இரவு காணாமல் போயுள்ளது. இந்நிலையில் அந்த நாயை கண்டுபிடித்து தருவோருக்கு சன்மானம் வழங்குவதாக அவர் ஒட்டியுள்ள போஸ்டர்கள் அப்பகுதி மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், காக்கி நிறத்தில் உயரம் குறைந்த குட்டையான 11 வயதுடையநாய் கழுத்தில் சிறிய மணி அணிந்திருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அந்த நாயை கண்டுபிடித்து தருவோருக்கு ஐந்தாயிரம் ரூபாய் பரிசு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு தன் வளர்ப்பு நாய்க்காக இவ்வளவு செய்வது பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போன வளர்ப்பு நாய்! மக்களின் கவனத்தை ஈர்த்த போஸ்டர்கள்!
Advertisment