திருச்சி திருவானைக்கோவில் பகுதியைச் சேர்ந்த வைத்தியநாதனின் மனைவி, கடந்த சில மாதங்களுக்கு முன்புதான் இறந்துள்ளார். இந்நிலையில், வைத்தியநாதனுக்கும் அவரது உறவினருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.
இதனால் நேற்று (19.09.2021) மகன் சர்மா (20), மகள் சுபிக்ஷா (17) ஆகியோருடன் வீட்டைவிட்டு வெளியே சென்ற வைத்தியநாதன், நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து வைத்தியநாதனின் தம்பி முரளிகிருஷ்ணன் ஸ்ரீரங்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவுசெய்து மாயமான 3 பேரையும் தேடிவருகின்றனர்.