
மதுரை மாட்டுத்தாவணியில் உள்ள இதயம் அறக்கட்டளையில் கரோனா பாதிக்கப்பட்டு இறந்ததாக நாடகமாடி குழந்தை விற்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பாக அதிரடி நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகையில்,அந்த அறக்கட்டளைக்கு சீல்வைக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், மாட்டுத்தாவணியில் உள்ள மையத்துக்கு குழந்தைகளுடன் வந்த பெண்கள் தொடர்பான ஆவணங்களைக் காணவில்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக தற்போது போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். தமிழ்நாடு முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் அதிரடி சோதனையில் ஈடுபட போலீசார் நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், குறிப்பிட்ட அந்தக் குழந்தைகள் நல காப்பகத்தின் உதவி மையத்தில்ஆவணங்கள் காணாமல் போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதியோர் இல்லங்கள், குழந்தை காப்பகங்கள் ஆகியவை வரும் ஜூலை 31ஆம் தேதிக்குள் பதிவுசெய்ய ஏற்கனவே தமிழ்நாடுஅரசு உத்தரவிட்டிருந்த நிலையில் தற்போது ஆவணங்கள் மாயமாகியிருக்கிறது என்பது அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
Follow Us