Skip to main content

கிணற்றில் சடலமாக மிதந்த காணாமல் போன குழந்தை!

Published on 27/11/2021 | Edited on 27/11/2021

 

Missing child corpse floating  in well

 

திருச்சி பெரிய மிளகுபாறை நாயக்கர் தெருவைச் சேர்ந்தவர்கள் இரட்டைமலை - தனலட்சுமி தம்பதி. இவர்களின் மகள் சிவரஞ்சனி (11), சிறப்பு குழந்தை (மனநலம் பாதிக்கப்பட்டவர்). இதன் காரணமாக சிவரஞ்சனியை பள்ளிகூடத்தில் சேர்க்கவில்லை. சிவரஞ்சனியை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை, எங்கு தேடியும் கிடைக்காததால் இதுகுறித்து பெற்றோர்கள் கண்டோன்மெண்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர்.

 

இதில் காணாமல் போன சிறுமி சிவரஞ்சினியை போலீசார் தேடிவந்தனர். இந்நிலையில், இன்று (27.11.2021) காலை பெரிய மிளகுபாறை நாயக்கர் தெரு பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் சிவரஞ்சினியின் சடலம் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் காவல்துறையினருக்குத் தகவல் அளித்தனர். போலீசார் அங்கு வந்து சடலத்தைக் கைப்பற்றி விசாரணை நடத்திவருகின்றனர். சிறுமி கிணற்றில் தற்செயலாக விழுந்தாரா? அல்லது யாரும் தள்ளிவிட்டார்களா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

 

 

சார்ந்த செய்திகள்