Advertisment

காணாமல்போன சிறுவன் 5 நாட்களுக்குப் பிறகு சடலமாக கண்டெடுப்பு... கெங்கவல்லியில் நிகழ்ந்த சோக சம்பவம்! 

Missing boy found  5 days later ... tragic incident in Kengavalli!

நேற்று சேலத்தில் சமையல் கேஸ் வெடித்து 5 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் 9 வயது சிறுவன் தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisment

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ளகெங்கவல்லி கிராமத்தில் இந்திரா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவரது ஒன்பது வயது மகன் புகழரசு. அரசு உதவிபெறும் பள்ளியில் நான்காம் வகுப்பு பயின்றுள்ளார். இந்நிலையில் கடந்த 19 ஆம் தேதி விளையாடச் சென்ற புகழரசு வீடு திரும்பவில்லை. காணாமல்போன சிறுவன் புகழரசை அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் ஊர் முழுவதும் தேடினர். புகழரசுவின் நண்பர்கள் வீடுகளிலும் தேடியும் புகழரசு கிடைக்கவில்லை. இறுதியில் கெங்கவல்லி காவல்நிலையத்தில் புகாரளித்தனர். போலீசார் ஒருபுறம் சிறுவனைத் தேடிவந்தனர்.

Advertisment

இந்நிலையில் சிறுவன் புகழரசு அவரது வீட்டுக்கு அருகிலே உள்ள 10 அடி ஆழம் கொண்ட நீர் தொட்டியில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. நிகழ்விடத்திற்கு வந்த போலீசார் உயிரிழந்த புகழரசுவின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காணாமல்போய் 5 நாட்கள் கழித்து சிறுவன் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தைஏற்படுத்தியுள்ளது.

school children Child Care police incidnet Salem
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe