Missing AIADMK leader's finger; Police net for biting and spitting

கடலூரில் அதிமுக பிரமுகரின் கைவிரலை நபர் ஒருவர் கடித்துத் துப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Advertisment

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே முன்விரோதம் காரணமாக அதிமுக நிர்வாகி மீது தாக்குதல் நடத்தப்பட்டு அவருடைய கை விரல்கள் கடித்துத் துப்பப்பட்டது. இது குறித்து ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர். பேரூராட்சி அதிமுக துணைச் செயலாளர் வனராஜ் மற்றும் அவருடைய குடும்பத்தினருடன் அதே பகுதியை சேர்ந்த வெங்கட் என்பவர் முன்விரோதம் காரணமாக தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

Advertisment

அப்போது வெங்கட் தரப்பில் இருந்த நபர்களில் ஒருவர் திடீரென கூட்டத்தில் வனராஜனுடைய இடது கையின் பெரு விரலை கடித்து துப்பியுள்ளார். கைவிரல் துண்டிக்கப்பட்ட நிலையில் ரத்தம் சொட்ட சொட்ட வனராஜ் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அதிமுக நிர்வாகியின் கைவிரலை கடிதத் துப்பியது தொடர்பாக ஐந்து பேரை போலீசார் தேடி வருகின்றனர்.