Skip to main content

நூறு நாட்கள் கழித்து கிடைத்த ஹரிணி...

Published on 08/01/2019 | Edited on 08/01/2019
harini


ஹரிணி என்ற காஞ்சிபுரத்தை சேர்ந்த சிறுமி மூன்று மாதங்களுக்கு முன்பு காணாமல் போனார். தற்போது திருப்போரூரில் மீட்கப்பட்டுள்ளார்.
 

வெங்கடேசன், காளியம்மன் என்ற நாடோடி இனத் தம்பதி தங்களது இரண்டு வயது குழந்தை ஹரிணியை காஞ்சிபுரம் மானாமதியிலுள்ள அணைக்கட்டு காவல்நிலையம் அருகே தொலைத்துவிட்டனர். காணாமல் போன குழந்தை கிடைக்கும் வரை இந்த இடத்தைவிட்டு நகர மாட்டோம் என்று அங்கேயே இருந்தனர். காஞ்சிபுரம் காவல்துறை, மூன்று தனிப்படைகள் அமைத்துத் தேடிவந்தது.
 

அக்குழந்தையின் தாய் ஒன்பது மாத கர்ப்பிணி குழந்தை காணாமல் போனதால் மன உளைச்சலுக்கு ஆளாகி, சீரியஸான நிலைக்கு சென்றுதால். அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
 

பின்னர், இந்த செய்தியை பற்றி அறிந்த நடிகர் ரஜினிகாந்த்தின் மனைவி லதா, வெங்கடேசனை அழைத்துப் பேசி தைரியப்படுத்தினார்.தான் நடத்திவரும் குழந்தைகள் அமைப்புமூலம் இரண்டு மாதங்களாக ஹரிணியைத் தேடிவருவதாகவும், மும்பையில் ஹரிணி போன்று ஒரு குழந்தை இருப்பதாகவும் குறிப்பிட்ட அவர், மும்பையில் பிரபல ஆர்ட்டிஸ்ட் மூலமாக அந்த கமிஷனரிடம் பேசி, ஹரிணியை மீட்பது சம்பந்தமாக நடவடிக்கை எடுத்துக்கெண்டிருப்பதாகத் தெரிவித்தார். இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது. 
 

இந்நிலையில், சிறுமி ஹரிணி 100 நாட்களுக்கு பின்னர் மீட்கப்பட்டுள்ளார். லதா ரஜினிகாந்த் பார்த்ததாகக் கூறிய நிலையில், திருப்போரூரில் சிறுமி ஹரிணி இன்று மீட்கப்பட்டுள்ளார். திருப்போரூர் போலீஸார் நாடோடி தம்பதியிடம் ஹரிணியை ஒப்படைக்க உள்ளனர்.


 

 

சார்ந்த செய்திகள்