Miss You All' - Police investigating seized letter

Advertisment

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவரது தற்கொலை தொடர்பாகக்கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா உலகில் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தனது குடும்பத்தினருடன் சென்னையில் வசித்து வருகிறார். இவரது மகள் மீரா (வயது 16). இவர் சென்னையில் உள்ள தனியார்ப் பள்ளி ஒன்றில் 12 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் மீரா இன்று அதிகாலை 3 மணியளவில் தனது வீட்டில் தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டார். தற்கொலை செய்து கொண்ட மீராவின் உடலை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்துள்ளனர்.அங்கே அவரது இறப்பு உறுதி செய்யப்பட்டது. பின்னர் அவரது உடல் ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு உடற்கூராய்விற்காகக் கொண்டு செல்லப்பட்டது.

Advertisment

இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சினிமா பிரபலங்கள் மற்றும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.கடந்த சில தினங்களாக மீரா மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சொல்லப்படுகிறது. தொடர்ந்து திரைப் பிரபலங்கள், நண்பர்கள் எனப் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

மறுபுறம் போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். சிறுமி இருந்த அறையிலும் போலீசார், தடயவியல் நிபுணர்கள் சோதனை செய்து வந்தனர். இந்த நிலையில், மீரா ஆங்கிலத்தில் எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளதாகத்தகவல்கள் வெளியாகியுள்ளன. அதில் 'மிஸ் யூ ஆல்' எனது நண்பர்கள், ஆசிரியர்களை நான் மிஸ் செய்வேன். எல்லோரும் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும்' என எழுதியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது அவரது கையெழுத்துதானா என இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.