Advertisment

வாட்சப்பில் பரவிய தவறான தகவல்!! காவல் நிலையம் முற்றுகை!

protest

தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு காவல் நிலையம் முன்பாக இன்று காலை சுமார் 10.30 மணியளவில் நகரை சுற்றியுள்ள கிராமங்களில் இருக்கும் பல்வேறு சமுதாயத்தை சார்ந்த மக்கள் திரண்டுவந்து கயத்தாறு காவல் நிலையம் முன்பு முற்றுகையிட்டனர். வாட்சப்பில் சமுதாயங்களை பற்றி தவறான தகவல் பரப்பியவரை உடனடியாககைது செய்ய வலியுறுத்தி கோசாமிட்டனர்.

Advertisment

முற்றுகையில் இருந்த மக்கள் சொல்வது என்னவென்றால்,

கயத்தாறு அருகே தலையால்நடந்தான்குளம் கிராமத்தை சேர்ந்த ஒருவர் ஆட்டோ டிரைவராக உள்ளார். அவர் பிற சமுதாயங்களை பற்றி தவறான தகவலை வாட்சப்பில் பரப்பினார். இது ஒற்றுமையாக வாழ்ந்த மக்களிடையே பிரச்சனையை ஏற்படுத்துகிறது. அதனால் அவரை கைது செய்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளோம் என்றார்கள்.

Advertisment

இது தொடர்பாக காவல் நிலைய அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

protest police watsapp
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe