A miserable situation due to lack of additional buses for School students traveling hanging from stairs

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அதை சுற்றியுள்ள பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு செல்வதற்காக போதிய பேருந்து வசதி இல்லாத காரணத்தால் ஆற்காட்டிலிருந்து கலவை வரை செல்லும் பள்ளி மாணவர்கள் அரசு பேருந்து படிக்கட்டில் தொங்கி செல்லும் அவலமான நிலைமை ஏற்பட்டுள்ளது.

தினம்தோறும் மாணவர்கள் பள்ளியை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக அவர்களது உயிர்களையும் உட்படுத்தாமல் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்பதால்படிக்கட்டில் தொங்கி விபத்துக்கள் நேரிட வாய்ப்பு உள்ளது. மாவட்ட நிர்வாகம் மற்றும் போக்குவரத்து துறையும் கவனத்தில் ஏற்று மாணவர்களின் இந்த ஆபத்தான பயணத்தை தடுப்பதற்காக கூடுதல் பேருந்து விடப்பட்டு வழிவகை செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். பலமுறை அரசுக்கு தகவல் கொடுத்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது பகுதியில் உள்ள பொதுமக்களின் வருத்தத்தை தெரிவிக்கின்றனர்.