/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/6_158.jpg)
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த அம்மனூர் கிராமத்தில் கிறிஸ்துவ வழிபாட்டுத் தளம் இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் வழிபாட்டுத்தளத்தை திறந்து வைக்க அதன் ஊழியர் தாமஸ் ராஜ் வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து நகர காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நகர காவல் துணை ஆய்வாளர் நாராயண சுவாமி தலைமையிலான காவல்துறையினர் நேரில் பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர். அதில் சுமார் 45 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக ஒளி வங்கிகள்(மைக்) மற்றும் 52 இன்ச் எல்.இ.டி டி.வியை மர்ம நபர்கள் திருடி சென்றதாக தெரியவந்தது.
இதனையடுத்து அங்குள்ள சிசிடிவி கேமரா ஆய்வு செய்தபோது இரண்டு சக்கர வாகனத்தில் வந்த முகமூடி அணிந்த இரண்டு நபர்கள் உள்ளே சென்று டிவி மற்றும் மைக்குகளை திருடிச் சென்ற காட்சிகள் அதில் இடம்பெற்றது. அதன் பேரில் நகர காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட முகமூடி கொள்ளையர்களை சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் தீவிரமாக தேடி வருகின்றனர்.
மேலும் அதே பகுதியில் மற்றொரு வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றுள்ளதாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2019-02/02 Raja.jpg)