Advertisment

பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை; வெளியான அதிர்ச்சி தகவல்!

Misbehaviour of student with the help of parents in nagercoil

Advertisment

நாகர்கோவில் மாவட்டம் கீரிப்பாறை அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்தவர் 12ஆம் வகுப்பு மாணவி. இவர், தனது குடும்பத்துடன் பூதப்பாண்டி பகுதியில் தங்கி இருந்து பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த பிப்ரவரி 19ஆம் தேதி பள்ளி மாணவி, மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதில் சந்தேகமடைந்த மாணவியின் பெற்றோர் பூதப்பாண்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அந்த புகாரின் பேரில், பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அந்த விசாரணையில், அந்த மாணவி சில மாதங்களுக்கு முன்பு பள்ளி விடுமுறைக்காக கீரிப்பாறை பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கே, ஆரல்வாய்மொழி பாரதிநகர் பகுதியைச் சேர்ந்த தொழிலாளி பிரகாஷ் (23) என்பவரின் பாட்டி வீடு, மாணவியின் பாட்டி வீடு அருகே உள்ளது. அந்த வகையில், பிரகாஷும், தனது பாட்டி வீட்டுக்கு சென்றுள்ளார்.

பக்கத்து வீடு என்பதால், மாணவிக்கும் பிரகாஷுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இந்த நிலையில், சம்பவம் நடந்த அன்று பிரகாஷ் தனது பெற்றோர் உதவியுடன் மாணவியை கடத்தி திருப்பூர் அழைத்துச் சென்றுள்ளார். மேலும் அவர், அங்கு தனியாக வீடு எடுத்து, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதனையடுத்து, மாணவி மாயமான வழக்கில் பிரகாஷ் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு பிரகாஷை தேடி வருவதை அறிந்த பிரகாஷின் பெற்றோர், திருப்பூர் மாவட்டத்திற்கு சென்று மாணவியை அழைத்து வந்துள்ளனர். மேலும் அவர்கள், நேற்று முன் தினம் (06-03-24) மாணவியை பூதப்பாண்டி அருகே உள்ள கிராமத்தில் மாணவியின் வீட்டு முன்பு விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். இந்த வழக்கில் பிரகாஷும் தலைமறைவாகி விட்டார் என்பது தெரியவந்தது.

Advertisment

இதற்கிடையே, மாணவியை பாலியல் வன்கொடுமை செய்து தலைமறைவாகியுள்ள பிரகாஷை பற்றி போலீசார் மேற்கொண்ட கூடுதல் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் கிடைத்தது. அதில், கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு, பிரகாஷுக்கும், திருமணமான பெண் ஒருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் திருமணத்தை மீறிய காதலாக மாறியுள்ளது.

இதனையடுத்து, அந்த பெண்ணை, அவரது குழந்தையுடன் அழைத்துக் கொண்டு ஆரல்வாய்மொழி பகுதியில் வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்துள்ளார். அப்போது, பிரகாஷ், அந்த பெண்ணை கொடுமை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதை தாங்காமல், அந்த இளம்பெண் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. மேலும், பிரகாஷ் இது போல் பல பெண்களை கடத்தி வந்து திருமணம் செய்யாமலேயே குடும்பம் நடத்தி அவர்களை கொடுமை செய்து துரத்தி விடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், தலைமறைவான பிரகாஷை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

incident Nagercoil
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe