Advertisment

புயல் நிவாரண நிதியில் முறைகேடு; விஏஓவுக்கு 8 ஆண்டு சிறை

Misappropriation of Rs 4 lakh in storm relief fund; 8 years imprisonment for VAO

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட கணிசப்பாக்கம் மற்றும் சித்தரைசாவடி கிராம மக்களுக்கு வழங்கப்பட்ட தானே புயல் நிவாரண நிதியில் ரூ 4 லட்சம் முறைகேடு செய்ததாக அக்கிராமத்தின் நிர்வாக அலுவலர் சம்பத் என்பவருக்கு எதிராக புகார் எழுந்தது. கடந்த 2014 ஆம் ஆண்டு கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதுகுறித்த வழக்கு வழக்கு விசாரணை கடலூர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணைக்கு தேவையான தகவல்களையும் ஊழல் தடுப்பு கண்காணிப்பு துணை காவல் கண்காணிப்பாளர் சத்யராஜ் வழங்கி வந்துள்ளார்.

Advertisment

இந்நிலையில் விசாரணை முடிவடைந்த நிலையில் 7-ந் தேதி தலைமை நீதிபதி நாகராஜன் கிராம நிர்வாக அலுவலர் சம்பத் குற்றவாளி என தீர்ப்பு வழங்கினார். மேலும் குற்றம் சாட்டப்பட்ட சம்பத் ஊழல்தடுப்பு மற்றும் இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 8 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 10 ஆயிரம் அபராதம்விதித்து உத்தரவிட்டார்.

Advertisment
verdict VAO Panruti Cuddalore police
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe