Miqjam storm Relief soon for those who do not have a ration card

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம்3, 4-ஆம் தேதிகளில் ‘மிக்ஜாம்’ புயல் காரணமாக வரலாறு காணாத மழைப்பொழிவு ஏற்பட்டது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிகக் கடுமையான வெள்ள பாதிப்பு ஏற்பட்டது. இந்த பாதிப்புகளிலிருந்து பொதுமக்களை மீட்கவும், அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கிடவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டதன் மூலம் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

Advertisment

இந்த சூழலில் மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6000 வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்களுக்கு இந்த நிவாரணத் தொகை நியாய விலைக் கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்பட்டது. அதே சமயம் ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கும் நிவாரணத் தொகை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

Advertisment

இந்நிலையில் ரேஷன் அட்டை இல்லாமல் மிக்ஜாம் புயல் நிவாரணம் கேட்டு விண்ணப்பித்திருந்தவர்களுக்கு விரைவில் ரூ.6 ஆயிரம் நிவாரண நிதி வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்த விண்ணப்பங்களைபரிசீலனை செய்து கணக்கெடுக்கும் பணி தற்போது முடிவடைந்துள்ளது. எனவே தகுதியானவர்களுக்கு விரைவில் நிவாரண நிதி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.