Advertisment

"குஜராத்தை மிஞ்சும் அளவிற்கு தமிழகம் முன்னேற்றம்" - அமைச்சர் காந்தி

minster gandhi talks about handloom department comparison gujarat versus tamilnadu

சேலம் மாவட்டம் கடை வீதியில் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை செயல்பட்டுவருகிறது. இங்கு தற்போது கட்டடங்கள் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் காந்தி நேற்று (24.05.2023) ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறுஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Advertisment

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் காந்தி, "கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் கோ-ஆப்டெக்ஸ்நிறுவனமானதுதொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு தரமானஜவுளிகள் தயாரிக்கப்பட்டதால் தற்போது 20 கோடி அளவுக்கு லாபம் ஈட்டப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக154 இடங்களில் கோ ஆப்டெக்ஸ் மையங்கள் உள்ளன.இதில் 105 மையங்கள் தமிழகத்திலும், 49 மையங்கள் வெளி மாநிலங்களிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள 45 மையங்களில்தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைத்தறிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நெசவுத்தொழிலாளர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்துவருகிறார்கள். கோ ஆப்டெக்ஸில் தற்காலிக பணியார்களாக பணிபுரிந்து வந்த 400 பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயேகுஜராத்திற்கு பிறகு தமிழகத்திற்கு 2வதுஇடம் என்று கூறிய நிலையில் தற்போதுதமிழகம் குஜராத்தைமிஞ்சும் அளவிற்கு ஜவுளித்துறையில் முன்னேற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்" எனக் கூறினார்.

Gandhi Gujarat Handlooms Salem Tamilnadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe