Skip to main content

"குஜராத்தை மிஞ்சும் அளவிற்கு தமிழகம் முன்னேற்றம்" - அமைச்சர் காந்தி

Published on 25/05/2023 | Edited on 25/05/2023

 

minster gandhi talks about handloom department comparison gujarat versus tamilnadu

 

சேலம் மாவட்டம் கடை வீதியில் கோ-ஆப்டெக்ஸ் தங்கம் பட்டு மாளிகை செயல்பட்டு வருகிறது. இங்கு தற்போது கட்டடங்கள் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி நேற்று (24.05.2023) ஆய்வு செய்தார். மேலும் பணிகளை விரைந்து முடிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அமைச்சர் காந்தி, "கடந்த அதிமுக ஆட்சியின் 10 ஆண்டு காலத்தில் கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமானது தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வந்தது. தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பிறகு  தரமான ஜவுளிகள்  தயாரிக்கப்பட்டதால் தற்போது 20 கோடி அளவுக்கு லாபம் ஈட்டப்பட்டுள்ளது. ஒட்டு மொத்தமாக 154 இடங்களில் கோ ஆப்டெக்ஸ் மையங்கள் உள்ளன. இதில் 105 மையங்கள் தமிழகத்திலும், 49 மையங்கள் வெளி மாநிலங்களிலும் உள்ளன. தமிழகத்தில் உள்ள 45 மையங்களில் தற்போது சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கைத்தறிக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். நெசவுத் தொழிலாளர்கள் படிப்படியாக முன்னேற்றம் அடைந்து வருகிறார்கள். கோ ஆப்டெக்ஸில் தற்காலிக பணியார்களாக பணிபுரிந்து வந்த 400 பணியாளர்களாக பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ளனர். மேலும் ஜவுளித்துறையில் இந்தியாவிலேயே குஜராத்திற்கு பிறகு தமிழகத்திற்கு 2வது இடம் என்று கூறிய நிலையில் தற்போது தமிழகம் குஜராத்தை மிஞ்சும் அளவிற்கு ஜவுளித் துறையில் முன்னேற்றத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் கொண்டு வந்துள்ளார்" எனக் கூறினார். 

 

 

சார்ந்த செய்திகள்

 

Next Story

“தமிழகத்திற்குத் தண்ணீர் திறந்துவிட முடியாது” - கர்நாடக முதல்வர் திட்டவட்டம்

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
Karnataka  refusal to open water to Tamil Nadu

தமிழகத்திற்கு நாள் ஒன்றுக்கு 1 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்று குழு பரிந்துரை செய்திருந்தது. இந்த நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா மற்றும் துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தலைமையில் தமிழகத்திற்குத் தண்ணீர் திறப்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து, தமிழகத்திற்குத் தண்ணீர் தரவே முடியாது என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்த கர்நாடக முதல்வர் சித்தராமையா, “காவிரி பாசனப் பகுதியில் 28 சதவீதம் தண்ணீர் பற்றாக்குறை உள்ளது. கர்நாடகாவின் வலியுறுத்தலை மீறி தண்ணீர் திறக்க காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டுள்ளது. கர்நாடகாவில் பற்றாக்குறை இருப்பதால் தற்போதைக்கு தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட  முடியாது” என்று தெரிவித்தார். மேலும் இது குறித்து ஆலோசனை நடத்தக் கர்நாடக மாநிலத்தில் உள்ள அனைத்து கட்சியினருக்கும் முதல்வர் சித்தராமையா அழைப்பு விடுத்துள்ளார். 

Next Story

10 பணியிடங்களுக்கு 1,000 பேர் குவிந்ததால் தள்ளுமுள்ளு; இளைஞர்களின் அவல நிலை!

Published on 12/07/2024 | Edited on 12/07/2024
1000 candidates compete for 10 vacancies in gujarat

குஜராத் மாநிலம், பரூச் பகுதியில் ஜாகாதியா இடத்தில் தனியார் பொறியியல் நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் இருந்த 10 காலிப்பணியிடங்களுக்கு ஆள் சேர்ப்பதற்கான நேர்காணல் அங்கலேஷ்வர் பகுதியில் உள்ள லார்ட்ஸ் பிளாசா ஹோட்டலில் கடந்த 8ஆம் தேதி நடந்துள்ளது.

ஆனால், இந்த பணியிடங்களுக்காக 1,800 பேர் வந்ததாகக் கூறப்படுகிறது.10 இடங்கள் கொண்ட பணிக்கு 1,000க்கும் மேற்பட்டோர் வந்ததால் அங்கு கூட்டம் அதிகமாக இருந்துள்ளது. ஹோட்டலில் நுழைவு வாயிலின் இரு பகுதியிலும் நூற்றுக்கணக்கானோர் நெருக்கியடித்து உள்ளே புகுந்துள்ளனர். சிலர் கதவுக்கு வெளியே ஒருவரையொருவர் முட்டி மோதியபடி உள்ளே சென்றனர். மேலும், தடுப்புக்காகப் போடப்பட்டிருந்த உலோக வேலியும் தள்ளப்பட்டு அந்த இடமே பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து காங்கிரஸ் கட்சி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் வீடியோ வெளியிட்டு, பா.ஜ.கவை கடுமையாகச் சாடியுள்ளது. மேலும், இந்த மாதிரி வேலையில்லாத் திண்டாட்டத்தை ஆளும் கட்சி, இப்போது நாடு முழுவதும் திணிக்கிறது என்று குற்றம் சாட்டியுள்ளது.